தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை + "||" + Jammu’s Doda is militancy free, say cops after Hizbul terrorist Masood killed in encounter

ஜம்மு காஷ்மீரில் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
ஸ்ரீநகர்

தெற்கு  காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள குல்சோகர் என்ற இடத்தில் செவா உல்லர் கிராமத்தில்  சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக  பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. 

இதையடுத்து இன்று அதிகாலை அந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனரா என பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

மோதலில் சுட்டு கொல்ல்பட்ட பயங்கவாதி ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி  என அழைக்கப்படும் மசூத் என தெரியவந்து உள்ளது. தோடா மாவட்டத்தில் இருந்து வந்த கடைசியாக எஞ்சியிருக்கும் பயங்கரவாதி மசூத் என்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறைத் தலைவர் தில்பாக் சிங் தெரிவித்தார்.

தோடாவில் நடந்த ஒரு கற்பழிப்பு வழக்கில் மசூத் குற்றஞ்சாட்டப்பட்டார், அவர் ஓடிவந்து ஹிஸ்புல் முஜாஹிதீன் இஅயக்கத்தில் சேர்ந்தார் என்று காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் தனது செயல்பாட்டு பகுதியை காஷ்மீருக்கு மாற்றினார்.

ஜம்மு காஷ்மீர் காவல்துறைத் தலைவர் தில்பாக் சிங் மசூத்தை கொன்றது  பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் உள்பட 3 பேர் காயம்
பயங்கரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
2. ரோந்து சென்ற மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் காயம்
ரோந்து சென்ற மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் இதில் 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.
3. காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
4. பாகிஸ்தான் விசாவுடன் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த 200 இளைஞர்கள் மாயம் - உளவுத்துறை எச்சரிக்கை
ஜம்மு-காஷ்மீரில் இருந்து 200 க்கும் மேற்பட்ட இளைச்சரிக்கைஞர்கள் பாகிஸ்தான் விசாவுடன் காணாமல் போயுள்ளதை அடுத்து உளவுத்துறை எச்சரிக்கை செய்து உள்ளது.
5. ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் பாதுகாப்புபடை வீரர் காயம்- குழந்தை பலி
ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புபடை வீரர் காயம்- ஒரு குழந்தை பலியாகி உள்ளது.