உத்திரபிரதேச மாநிலத்தில் மேலும் 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


உத்திரபிரதேச மாநிலத்தில் மேலும் 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 29 Jun 2020 12:12 PM GMT (Updated: 29 Jun 2020 12:12 PM GMT)

உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லக்னோ,

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மராட்டியம், டெல்லி, தமிழகம் போன்ற மாநிலங்களில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

உத்திரபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கணிசமாகவே உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.

உத்திரபிரதேசத்தில் நேற்று வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22,143 ஆக இருந்தது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 660 ஆக இருந்தது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உத்திரபிரதேச மாநிலத்தில் புதிதாக 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி அமித் மோகன் பிரசாத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,828 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு புதிதாக 12 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 672 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 6,650 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை மாநிலத்தில் 15,506 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Next Story