தேசிய செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க ரெயில்களின் ஏ.சி. பெட்டிகளில் புதிய வசதி + "||" + To prevent corona spread A.C. of the rails. New facility in boxes

கொரோனா பரவலை தடுக்க ரெயில்களின் ஏ.சி. பெட்டிகளில் புதிய வசதி

கொரோனா பரவலை தடுக்க ரெயில்களின் ஏ.சி. பெட்டிகளில் புதிய வசதி
கொரோனா பரவலை தடுக்க ரெயில்களின் ஏ.சி. பெட்டிகளில் புதிய வசதியை இந்திய ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது.
புதுடெல்லி, 

குளிரூட்டப்பட்ட அறைகளில் கொரோனா வேகமாக பரவும் என கண்டறியப்பட்டு இருக்கிறது. எனவே கொரோனா பரவாமல் தடுக்க ரெயில்களின் ஏ.சி. பெட்டிகளில் புதிய வசதியை இந்திய ரெயில்வே மேற்கொண்டு உள்ளது.

அதாவது தற்போதைய நிலையில் ரெயில்களின் ஏ.சி. எந்திரங்கள் மணிக்கு 6 முதல் 8 முறையே புதிய காற்றை உள்ளிழுக்கிறது. இதன் மூலம் 20 சதவீத அளவுக்கே புதிய காற்று பெட்டிக்குள் கிடைக்கிறது. மீதமுள்ள காற்று மறுசுழற்சி செய்யப்பட்டதாகவே இருந்து வருகிறது. இதனால் கொரோனா பரவ வாய்ப்பு ஏற்படுகிறது.

எனவே இனிமேல் மணிக்கு 16 முதல் 18 முறை புதிய காற்றை உள்ளிழுக்கும் எந்திரங்கள் பொருத்தப்படுகின்றன. இந்த புதிய நடைமுறை கடந்த மாதம் 12-ந்தேதி முதல் ராஜ்தானி தடங்களில் 15 இணை ரெயில்களில் பரிசோதித்து பார்க்கப்பட்டு உள்ளது. இது இனிமேல் அனைத்து ரெயில்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

மறுசுழற்சி செய்யப்பட்ட காற்றை பயன்படுத்தும்போது அது விரைவில் குளிரூட்டப்படும். ஆனால் அடிக்கடி புதிய காற்றை குளிரூட்டுவதற்கு 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் எரிபொருள் தேவைப்படுகிறது. எனவே இந்த புதிய நடைமுறையால் ஏ.சி. பெட்டிகளுக்கு கட்டணம் அதிகரிக்கும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை: கொரோனா பரவலை தடுக்க துரித நடவடிக்கை அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க நோய் தடுப்பு பணியை துரிதப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
2. கொரோனா பரவலை தடுக்க மதுரையிலும் முழு ஊரடங்கு - தமிழக அரசு உத்தரவு
கொரோனா பரவலை தடுக்க மதுரை, சுற்றுப்புறங்களில் முழு ஊரடங்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
3. கொரோனா பரவலை தடுக்க ஆந்திர எல்லை மூடல்
கொரோனா தொற்று பரவலை தடுக்க ஆந்திர எல்லை மூடப்பட்டது.
4. 200 வார்டுகளுக்கு தனி குழு நியமனம்: கொரோனா பரவலை தடுக்க - மைக்ரோ திட்டம் மாநகராட்சி கமிஷனர் தகவல்
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க மைக்ரோ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
5. கொரோனா பரவலை தடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு புதிய ஆலோசனை - ‘பொது போக்குவரத்தை தவிர்த்து சைக்கிளில் போக மக்களை ஊக்குவியுங்கள்’
கொரோனா பரவல் தடுக்க பொது போக்குவரத்தை தவிர்த்து சைக்கிள் சவாரி போக மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு புதிய ஆலோசனை கூறி உள்ளது.