தேசிய செய்திகள்

சாத்தான்குளம் சம்பவம் நிர்பயா வழக்கை விட கொடூரமானது - முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஆவேசம் + "||" + The Satankulam incident is more horrifying than the Nirbhaya case - Former Justice Markandeya Katju

சாத்தான்குளம் சம்பவம் நிர்பயா வழக்கை விட கொடூரமானது - முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஆவேசம்

சாத்தான்குளம் சம்பவம் நிர்பயா வழக்கை விட கொடூரமானது - முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஆவேசம்
சாத்தான்குளம் சம்பவம் நிர்பயா வழக்கை விட கொடூரமானது என்று முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் உயிரிழந்த சம்பவம் டெல்லி நிர்பயா கற்பழிப்பு வழக்கை விட கொடூரமானது என ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மார்கண்டேய கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.


நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கியது போல சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய களுக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு சம்பவத்தில் நிர்பயாவின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுளைத்தது போலவே, சாத்தான்குளம் சம்பவத்திலும் பென்னிக்சின் ஆசன வாயில் தடியை சொருகிய கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதில் கவனிக்க வேண்டியது நிர்பயா சம்பவம் தனிநபர் அதாவது பொது மக்களில் சிலரால் செய்யப்பட்டது. ஆனால் இங்கே சட்டத்தை நிலை நிறுத்துவதையும் குடிமக்களை பாதுகாப்பதையும் கடமையாகக் கொண்ட போலீஸ்காரர்களால் இது செய்யப்பட்டுள்ளது.

குற்றங்கள் சாதாரண மக்களால் செய்யப்பட்டால், சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் காவல்துறையினரால் குற்றம் செய்யப்பட்டால், அவர்கள் கடமைகளுக்கு முற்றிலும் முரணான செயலை செய்தால், அவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தூக்கிலிடப்பட்டால், சாத்தான்குளம் வழக்கிலும் சம்பந்தப்பட்ட போலீசார் குற்றவாளிகளாக இருந்தால் தூக்கிலிடப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை குழு தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் வருகை
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. விசாரணை குழு தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் வந்து சேர்ந்தனர்.
2. சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பென்னிக்ஸின் நண்பர்களிடம் மீண்டும் விசாரணை
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பென்னிக்ஸின் நண்பர்களிடம் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.
3. சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை; அதிகாரிகள் நாளை தமிழகம் வருகை
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நாளை சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் தமிழகம் வருகின்றனர்.
4. சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை விசாரணைக்கு ஏற்றது சி.பி.ஐ.
சாத்தான் குளம் தந்தை மகன் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
5. சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீசார் மதுரை சிறையில் அடைப்பு
சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீசார் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.