தேசிய செய்திகள்

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரை + "||" + PM Modi to address nation at 4 pm today

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரை

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரை
கொரோனா ஊரடங்கு, லடாக் மோதல் மற்றும் சீன செல்போன் செயலிகளுக்கு தடை போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கு மத்தியில் பிரதமர் உரை நிகழ்த்துவது மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் பரவி வருவதால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இது பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது. இவ்வாறு நீட்டிக்கப்பட்டபோது பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வந்தார்.

தற்போது நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதில் 2-ம் கட்ட தளர்வுகள் நாளை (புதன்கிழமை) அமலுக்கு வருகின்றன.

இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் நேற்று தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தது.

கொரோனா ஊரடங்கு, லடாக் மோதல் மற்றும் சீன செல்போன் செயலிகளுக்கு தடை போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கு மத்தியில் பிரதமர் உரை நிகழ்த்துவது மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தி அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை
அயோத்தி அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
2. தேசிய கல்விக் கொள்கை: பல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும் - பிரதமர் மோடி
தேசிய கல்வி கொள்கை பல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல்
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளித்தால் புதிய கொள்கை இன்று வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
4. கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் குறைவு - பிரதமர் மோடி
கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் குறைவாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
5. அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்கள்;பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
மும்பை, கொல்கத்தா, நொய்டாவில்அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்கள்பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்