தேசிய செய்திகள்

எல்லையில் சீனாவின் படைகுவிப்பை தொடர்ந்து இந்தியா சக்தி வாய்ந்த பீஷ்மா பீரங்கிகளை நிறுத்துகிறது + "||" + India deploys T-90 tanks in Galwan Valley after China’s aggressive posturing at LAC

எல்லையில் சீனாவின் படைகுவிப்பை தொடர்ந்து இந்தியா சக்தி வாய்ந்த பீஷ்மா பீரங்கிகளை நிறுத்துகிறது

எல்லையில் சீனாவின் படைகுவிப்பை தொடர்ந்து இந்தியா சக்தி வாய்ந்த பீஷ்மா பீரங்கிகளை நிறுத்துகிறது
லடாக் எல்லையில் சீனாவின் ஆக்ரோஷமான படைகுவிப்பை தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா சக்தி வாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை நிறுத்துகிறது.
புதுடெல்லி

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ந் தேதி ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர், சீன தரப்பில் 35 பேரும் உயிர் இழந்தனர் ஆனால் உண்மையான எண்னைக்கையை சீனா சொல்ல வில்லை.

மோதல் தொடர்பாக இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. 

இதனிடையே கல்வான் பகுதியில் சீனா தனது படைகளை குவித்துள்ள காட்சிகள் செயற்கைக் கோள் மூலமாக படமாக்கப்பட்டு வெளியாகி உள்ளன.

மேலும் சீனா தனது உரிமைகோரும் பகுதியை தாண்டி 423 மீட்டர்  நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளது. 

இந்தியா சீனா இடையே சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதும் இருநாடுகளும் படைகளைக் குவித்த வண்ணம் உள்ளன.

இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த மூத்த இராணுவத் தளபதிகள் இன்று சுஷூலில் சந்தித்து பரஸ்பர விதிமுறைகளை விரிவுபடுத்துதல் மற்றும் படையை குறைத்தல் ஆகியவை குறித்து பேச்சு வார்த்தை மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில் இந்தியா தனது சக்தி வாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை அதிகளவுக்கு எல்லையில் குவித்து உள்ளது. துல்லியமான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இந்த பீரங்கி, ஒருநிமிடத்தில் 60 குண்டுகளைப் பொழியும் ஆற்றல் மிக்கது.

ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை கையாளும் திறன் கொண்ட இந்த பீரங்கிகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை. 48 டன் எடை கொண்ட இந்த பீரங்கி ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்டதாகும்.

சீனா படைகளை குவித்ததை தொடர்ந்தே இந்தியாவும் படைகளை குவிக்கிறது


தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் கொரோனா வைரஸ் தோற்றம்: உலக சுகாதார அமைப்பு விசாரணைக்கு அமெரிக்கா வரவேற்பு
சீனாவில் கொரோனா வைரஸ் நோயின் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட விசாரணையை அமெரிக்கா வரவேற்றதாக அமெரிக்க்க தூதர் தெரிவித்து உள்ளார்.
2. இரு தரப்பினரும் "போட்டியாளர்களாக இல்லாமல் பங்காளிகளாக" இருக்க வேண்டும் இந்தியாவுக்கு சீனத் தூதர் அழைப்பு
இரு தரப்பினரும் "போட்டியாளர்களாக இல்லாமல் பங்காளிகளாக" இருக்க வேண்டும் என 18 நிமிட யூடியூப் வீடியோவில் சீனத் தூதர் சன் வீடோங் கூறி உள்ளார்.
3. கொரோனா நோய் பாதிப்பு: இறப்புகளைப் பொறுத்தவரை 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆபத்தில் உள்ளனர்
கொரோனா நோய் பாதிப்பை தொடர்ந்து இறப்புகளைப் பொறுத்தவரை 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆபத்தில் உள்ளனர் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.
4. கொரோனா பாதிப்பு : சென்னையில் 20,271 பேருக்கு சிகிச்சை ; 52,287 பேர் குணமாகியுள்ளனர்
சென்னையில் மொத்தம் 20,271 பேருக்கு கொரோனா சிகிச்சை பெற்றுவருகின்றனர். 52,287 பேர் இதுவரை குணமாகியுள்ளனர்.
5. கொரோனாவை பயன்படுத்தி சொந்த ஆதாயம்: சீனா மீது விசாரணை கோரி மசோதா-அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்
சீனா மீது விசாரணை கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.