தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் கொரோனாவுக்கு மேலும் 245 பேர் உயிரிழப்பு + "||" + Maharashtra reports 245 deaths and 4878 new COVID19 positive cases today State Health Department

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் கொரோனாவுக்கு மேலும் 245 பேர் உயிரிழப்பு

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் கொரோனாவுக்கு மேலும் 245 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் கொரோனாவுக்கு மேலும் 245 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை எட்டியே உயர்ந்து வருகிறது.

இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் நேற்று வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,68,883 ஆக இருந்தது.

இந்நிலையில் இன்று ஒரேநாளில் 4,878 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 761 பேரை கொரோனா தாக்கி உள்ளது. மேலும்  75,979 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மராட்டியத்தில் கடந்த 48 மணிநேரத்தில் 245 பேர் பலியாகி உள்ளனர்.இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 855 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. முதல் முறையாக மாஸ்க் அணிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
உலக சுகாதார மையம் வலியுறுத்திய நிலையிலும் இதுவரை முகக்கவசம் அணியாமல் இருந்த டொனால்டு டிரம்ப் முதன்முறையாக தற்போது மாஸ்க் அணிந்துள்ளார்.
2. மார்க்கெட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த சந்தை ஒழுங்குப்படுத்தும் குழு அமைப்பு
மார்க்கெட் பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் சந்தை ஒழுங்குப்படுத்தும் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
3. தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் பலி: இதுவரையில் 1,898 பேர் சாவு
தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் பலியாகினர். 4 மாவட்டங்களில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரையில் 1,898 பேர் இறந்து உள்ளனர்.
4. சென்னை போலீசில் கொரோனாவில் இருந்து 27 பேர் மீண்டனர்: புதிதாக 12 போலீசாருக்கு தொற்று
சென்னை போலீசில் கொரோனாவில் இருந்து 27 பேர் மீண்டுள்ளனர். மேலும் புதிதாக 12 போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பிரேசிலில் கொரோனாவுக்கு பலி 70 ஆயிரத்தை தாண்டியது
பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது.