கொரோனாவை குணமாக்கும் மருந்து என கூறவில்லை பதஞ்சலி நிறுவனம் பல்டி


கொரோனாவை குணமாக்கும் மருந்து என கூறவில்லை பதஞ்சலி நிறுவனம் பல்டி
x
தினத்தந்தி 1 July 2020 6:21 AM IST (Updated: 1 July 2020 6:21 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவை குணமாக்கும் மருந்தை கண்டுபிடித்ததாக கூறவில்லை என பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.


புதுடெல்லி

கொரோனாவை குணமாக்கும் மருந்து என கொரோனில் என்ற பெயரில் கடந்த 22ஆம் தேதி ராம்தேவ் அறிமுகப்படுத்திய மருந்தை விளம்பரம் செய்யக்கூடாது என தடுத்துள்ள ஆயுஷ் அமைச்சகம், மருந்து குறித்து பல கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

இந்த நிலையில் உத்தராகண்ட் மாநில ஆயுஷ் அமைச்சகம் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளித்துள்ள பதஞ்சலி நிறுவனத்தின் சிஇஓ ஆச்சார்ய பால்கிருஷ்ணா இவ்வாறு கூறி உள்ளார்.

அந்த மருந்தை எடுத்துக் கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு குணம் கிடைத்தது என்று மட்டுமே கூறியதாக குறிப்பிட்டுள்ள அவர், வேண்டுமானால் மீண்டும் கிளினிகல் சோதனைகளை நடத்த தயார் என்றும் பதிலளித்துள்ளார். பதஞ்சலி நிறுவனத்தை அழிக்க சிலர் சதி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.  

Next Story