ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 657 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 657 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 1 July 2020 6:48 PM IST (Updated: 1 July 2020 6:48 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 657 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமராவதி,

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கணிசமாகவே உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.ஆந்திராவில் நேற்று வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,891 ஆக உள்ளது

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில்  மேலும் 657 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,252 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு புதிதாக 6 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 8,071 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை மாநிலத்தில் 6,988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Next Story