தெலுங்கானாவில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: இன்று ஒரேநாளில் மேலும் 1,018 பேருக்கு கொரோனா தொற்று
தெலுங்கானாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் மேலும் 1,018 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்,
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
தெலுங்கானாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் இன்று தெலுங்கானாவில் இன்று ஒரேநாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 1,018 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 17,357 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 267 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரேநாளில் 788 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,082 ஆக உயர்ந்துள்ளது. .தற்போது வரை 9,008 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
Related Tags :
Next Story