குறித்த நேரத்தில் ரயில்களை இயக்கி ரயில்வே சாதனை - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பெருமிதம்
நாடு முழுவதும் பொது முடக்கம், தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலையில், இந்திய ரயில்வே அனைத்து ரயில்களையும் சரியான நேரத்தில் இயக்கும் தனித்துவமான சாதனையை நேற்றைய தினம் படைத்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் ரயில்கள் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தபடி தான் செல்லும். ஆனால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொரோனா பொது முடக்கத்தால் ரயில்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
இந்நிலையில் நாடு முழுவதும் பொது முடக்கம், தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலையில், இந்திய ரயில்வே அனைத்து ரயில்களையும் சரியான நேரத்தில் இயக்கும் தனித்துவமான சாதனையை நேற்றைய தினம் படைத்துள்ளது. நாட்டில் நேற்று இயக்கப்பட்டு 201 ரயில்களும் குறிப்பிட்ட நேரத்தில் அவை செல்லும் ரயில் நிலையத்தை சென்றடைந்ததாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஜூன் 23-ம் இயக்கப்பட்ட ரயில்களில், 99.54 சதவீதம் ரயில்கள் துல்லியமான நேரத்தில் அவை செல்ல வேண்டிய ரயில் நிலையங்களுக்கு சென்றடைந்துள்ளன. ரயில்வேயின் இந்த சாதனையை அமைச்சர் பியூஸ் கோயல் தனது பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார்.
Related Tags :
Next Story