இந்தியாவில் நேற்று ஒருநாளில் மட்டும் 2,41,576 மாதிரிகள் பரிசோதனை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
இந்தியாவில் நேற்று ஒருநாளில் மட்டும் சுமார் 2.41 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. கொரோனா தொற்றால் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. கொரோனா தொற்றால் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு வீச்சில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லாததால், அதிக அளவு பரிசோதனைகள் உள்ளிட்ட நடவடிக்கை மூலமே கொரோனா பரவலைக் கட்டுக்குள் வர முடியும் என்று ம்ருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவில் இதுவரை 92,97,749 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் 2,41,576 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story