ஜல்லிக்கட்டின் போது காளைகள்‘மரணம்’ விலங்கு நல அமைப்பு தமிழக அரசுக்கு கடிதம்


ஜல்லிக்கட்டின் போது காளைகள்‘மரணம்’ விலங்கு நல அமைப்பு தமிழக அரசுக்கு கடிதம்
x
தினத்தந்தி 3 July 2020 4:17 PM IST (Updated: 3 July 2020 4:17 PM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு ஆய்வு அறிக்கையின் மீதான பதில்களை விரைவாக வழங்குமாறு தமிழக அரசை இந்திய விலங்குகள் நல வாரியம் கேட்டு கொண்டுள்ளது

புதுடெல்லி

தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள ஜூன் 26 தேதியிட்ட ஒரு கடிதத்தில், இந்திய விலங்குகள் நல வாரியம்  செயலாளர் டாக்டர் எஸ்.கே. தத்தா கூற இருப்பதாவது: 

பீட்டா ஒரு ஆய்வு அறிக்கையை அனுப்பியுள்ளது, அதில் போது ஆறு விலங்குகள் இறந்துவிட்டதாக (ஜல்லிக்கட்டு திருவிழாவின் போது) தெரிவிக்கப்பட்டுள்ளது. சில படங்கள் விலங்குகளை நகங்களால் சுரண்டுவதாக காட்டி உள்ளன. அது விலங்குகளுக்கு என்ன கொடுமை நடக்கிறது என்பதைக் காட்டியது.

இந்திய விலங்குகள் நல வாரியம் தமிழக அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து ஒரு தனி குழுவை அமைத்திருந்தது, அதில் “விலங்குகள் மற்றும் மனித உயிர்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தடுக்க அமைப்பாளர்கள் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை”என்று கண்டறிந்துள்ளது.

ஆறு காளை இறப்புகளைப் பதிவுசெய்த பீட்டா அறிக்கைக்கு மாறாக, இந்திய விலங்குகள் நல வாரியம்  அமைத்த குழுவின் அறிக்கையில், ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவின் போது நடைபெற்ற “வறாக நிர்வகிக்கப்பட்ட நிகழ்வு காரணமாக ஒரு காளை மற்றும் 13 பேர் இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டு உள்ளது.

"மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, மேலதிக தேவையான நடவடிக்கைகளை எடுக்க பீட்டாவிடமிருந்து பெறப்பட்ட ஜல்லிக்கட்டு ஆய்வு அறிக்கையின் கருத்துக்களை உடனடியாக வாரியத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது," என்று வாரியத்தின் கடிதம் கூறியது, 

இது ஒரு சட்டரீதியான அமைப்பாகும் இது விலங்கு நலன் குறித்து அரசாங்கத்திற்கு அறிவுறுத்துகிறது. "தயவுசெய்து இதை மிகவும் அவசரமாக கருதுங்கள்" என்று அதில் மேலும் கூறப்பட்டு உள்ளது.


Next Story