தேசிய செய்திகள்

இந்தியாவில் இறந்த கொரோனா நோயாளிகளில் 43 சதவீதம் பேருக்கு நாட்பட்ட நோய்கள் எதுவும் இல்லை : அரசு பகுப்பாய்வு + "||" + 43% of Covid patients in India who died had no comorbidities: Govt analysis

இந்தியாவில் இறந்த கொரோனா நோயாளிகளில் 43 சதவீதம் பேருக்கு நாட்பட்ட நோய்கள் எதுவும் இல்லை : அரசு பகுப்பாய்வு

இந்தியாவில் இறந்த கொரோனா நோயாளிகளில் 43 சதவீதம் பேருக்கு நாட்பட்ட நோய்கள் எதுவும் இல்லை : அரசு பகுப்பாய்வு
இந்தியாவில் இறந்த கொரோனா நோயாளிகளில் 43 சதவீதம் பேருக்கு நாட்பட்ட நோய்கள் எதுவும் இல்லை என அரசின் பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது.
புதுடெல்லி: 

கடந்த 24 மணி நேரத்தில் 20,903 புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இதை தொடரந்து இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 625,544 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 379 பேர் கொடிய வைரசுக்கு பலியாகி உள்ளனர்.இதனால் கொரோனா இறப்பு எண்ணிக்கை 18,213 ஆக உயர்ந்துள்ளது. 

ஜூலை 2 வரை சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 92,97,749 ஆகும், இதில் 2,41,576 மாதிரிகள் நேற்றுமட்டும் பரிசோதிக்கப்பட்டன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு பதிவாகிய ஐந்து மாதங்களுக்கும் மேலாக, ஜூலை 2 ஆம் தேதி வரை இறப்புகள் குறித்த அரசாங்க பகுப்பாய்வில் இறந்தவர்களில் பாதிக்கும் குறைவானவர்களே  இளைஞர்கள் என்பதை காட்டுகிறது. 60 வயதிற்குட்பட்டவர்கள். இறப்புகளில் 43 சதவீதத்தில், அறியப்பட்ட நாட்பட்ட நோயாளிகள் யாரும்  இல்லை.

இறந்த கொரோனா பாதிப்பு நோயாளிகளில் பெரும்பாலானவர்களுக்கு நாட்பட்ட நோய்கள் இருப்பதாக மத்திய அரசு பலமுறை கூறிய நிலையில் பகுப்பாயில் அதற்கு நேர் எதிராக தெரியவந்து உள்ளது.இந்த பகுப்பாய்வு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (MoHFW) கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தால் செய்யப்பட்டுள்ளது, மேலும் நாட்டில் உள்ள அனைத்து தொற்று நோய்களையும் கண்காணிப்பதில் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

ஜூலை வரை பதிவு செய்யப்பட்ட 17,834 இறப்புகள் அனைத்தும் பகுப்பாய்வு செய்யப்பட்டாலும், டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் மராட்டிய  ஆகிய மூன்று மாநிலங்கள் குறித்த தரவுகளை சரியாக பகிர்ந்து கொள்ளவில்லை.  நாட்பட்ட நோய்கள் மற்றும் வயதுக் குழு தரவு 15,962 இறப்புகளுக்கு மட்டுமே கிடைத்தன என்று ஐடிஎஸ்பி தெரிவித்துள்ளது.இறப்பு  குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் கடைசியாக மே 21 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன, அந்த நேரத்தில் நாட்பட்ட நோய்கள் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு 73 சதவீதமாக இருந்தது. மொத்த பாதிப்புகள் 1,12,359 மற்றும் 3,435 இறப்புகளாக இருந்தது

ஐடிஎஸ்பி பகுப்பாய்வின்படி, வயது வாரியாக இறப்புக்கள் விவரம் வருமாறு

14 வயதுக்கு குறைவான குழந்தைகள் 0.54 சதவீதம் 

15-29 வயதுக்குட்பட்டவர்கள் 2.64 சதவீதம்,

30-44 வயதுடையவர்கள் 10.82 சதவீதம்,

45-59 வயதுக்குட்பட்டவர்கள் 32.79 சதவீதம்,

60-74 வயதுக்குட்பட்டவர்கள் 39.02 சதவீதம் மற்றும்

75 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12.88 சதவீதம்.


இறப்புக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வயதானவர்கள் இறப்புகள் நிகழ்கின்றன.ஊரடங்கு தளர்த்திய பின்னர் வீட்டில் இருக்கும்படி  பலமுறை கேட்கப்பட்டபின்னரும் வெளியே நடமாடிய ஒரு குழு - 45-59 வயதுக்குட்பட்டவர்களில் இறப்பு விகிதத்தில் கணிசமான விகிதம் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மூன்று கொரோனா  இறப்புகளில் ஏறக்குறைய ஒன்று இந்த குழுவில் நடக்கிறது.

நாட்பட்ட நோயாளிகள் மற்றவர்களை விட மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பது எப்போதும் அறியப்பட்டதாகும். கொரோனா பரவல் ஆரம்ப நாட்களில், ஒவ்வொரு முறையும் ஒரு மரணம் நிகழ்ந்தபோது, இந்திய அரசாங்கத்தின் அறிக்கை வழக்கமாக நாட்பட்ட நோயாளிகளே மரணம் அடைந்ததாக கூறியது.


இருப்பினும், சமீபத்திய ஜூலை 2 வரை ஐடிஎஸ்பி பகுப்பாய்வு  இறந்த 57 சதவீத கொரோனா பாதிக்கபட்டவர்களில்  நாட்பட்ட நோயாளிகள் என கண்டறியப்பட்டுள்ளன. மற்றவர்களைப் பொறுத்தவரை, இந்த நோய் மட்டுமே மரணத்திற்கு காரணமாக இருந்தது.

ஜொரோனா நோயாளிகளை அதிக ஆபத்தில் ஆழ்த்தும் நாட்பட்ட நோய்களாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் உள்ளன.

புள்ளிவிவர வலைத்தளத்தின் நியூயார்க் இறப்புகள் பற்றிய ஒரு பகுப்பாய்வு, அந்த நகரத்தில் 89 சதவீத இறப்புகளை நாட்பட்ட நோயாளிகளுடன் இணைக்கிறது.

ஜூலை 2 ம் தேதி வரை கொரோனா இந்தியாவில் இறப்பு விகிதம் 3 சதவீதமாக இருந்தது. இந்தியாவில் நிகழும் இறப்புகளில் 68 சதவீதம் ஆண்கள் தான் என்பதையும் பகுப்பாய்வு காட்டுகிறது.32 சதவீதம் பெண்களாக இருந்தது.

இது உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப உள்ளது, இருப்பினும் சில இந்திய பகுப்பாய்வுகள் இந்திய பெண்களில் இறப்பு விகிதம் சர்வதேச சராசரியை விட அதிகமாக இருப்பதாக கூறியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஒரு ஆய்வில், சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் ஜர்னல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் பத்திரிகையில் ஒரு ஆண் கொரோனா நோயாளியின் மரண ஆபத்து ஒரு பெண்ணை விட 2.4 மடங்கு அதிகம் என்று தெரிவித்து இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விடிய விடிய கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் மும்பை-மின்சார ரயில்கள் ரத்து
மும்பையில் இன்றும் நாளையும் மிக மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் யாருக்கு கிடைக்கும்?
உலகிற்கு தடுப்பூசி வழங்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் யாருக்கு கிடைக்கும்?
3. காசநோய்த் தடுப்பூசி கொரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம்...! ஆய்வில் தகவல்
காசநோயைத் தடுப்பதற்காக போடப்படும் பேசிலஸ் கால்மெட்-குய்ரின் (பி.சி.ஜி) ஆய்வில் கொரோனா தொற்றை கட்டிப்படுத்தலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
4. அபிஷேக் இன்னும் சிகிச்சையில் இருப்பதை நினைக்கும்போது மனம் வலிக்கிறது - அமிதாப் பச்சன்
அபிஷேக் இன்னும் சிகிச்சையில் இருப்பதை நினைக்கும்போது மனம் வலிக்கிறது என அமிதாப் பச்சன் கூறி உள்ளார்.
5. அப்ரிடி அதிவேக சதம் அடித்த போது பயன்படுத்திய பேட் இந்திய வீரருடையது: சுவாராஸ்ய தகவல்
கடந்த 1994 ஆம் ஆண்டு 37-பந்துகளில் அப்ரிடி சதம் அடித்ததே அதிவேக சதமாக அப்போது பதிவு செய்யப்பட்டது.