லடாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் திருக்குறளை குறிப்பிட்டு உரையாற்றிய மோடி


லடாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் திருக்குறளை குறிப்பிட்டு உரையாற்றிய மோடி
x
தினத்தந்தி 3 July 2020 8:39 PM IST (Updated: 3 July 2020 8:39 PM IST)
t-max-icont-min-icon

லடாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் திருக்குறளை குறிப்பிட்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.

லடாக்,

இந்தியா-சீனா இடையே மோதல் நிலவி வரும் நிலையில் இன்று அதிரடி திருப்பமாக இந்திய பிரதமர் மோடி லடாக் சென்றார். லடாக்கில் இருக்கும் நிம்மு ராணுவ முகாமிற்கு அவர் சென்று இந்திய வீரர்களுடன் உரையாடினார். வீரர்கள் முன் பேசிய பிரதமர் மோடி தமிழில் திருக்குறள் ஒன்றை குறிப்பிட்டார். அதில்,

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு

என்ற குரளை பிரதமர் மோடி கூறினார். பிறகு இதற்கு ஹிந்தியில் விளக்கமும் கொடுத்தார். அவரது இந்த செயல் நாடு முழுக்க பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த குரலின் பொருள் "வீரம், மானம், முன்னோர் சென்ற வழியை பின்பற்றி செல்லுதல், தலைவனின் நம்பிக்கையைப் பெற்று நடப்பது ஆகியவை ஒரு படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும் என்பதாகும்.

பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில், திருக்குறளை உதாரணம் காட்டி பேசியது கவனிக்கத் தக்கதாக அமைந்தது.

Next Story