டெல்லியில் இன்று மேலும் 2,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சுகாதாரத்துறை தகவல்


டெல்லியில் இன்று மேலும் 2,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 3 July 2020 9:55 PM IST (Updated: 3 July 2020 9:55 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் இன்று மேலும் 2,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,695 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்புகளில் மராட்டியத்திற்கு அடுத்தபடியாக தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இன்று மேலும் 2,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 94,695 ஆக உயர்ந்து உள்ளது. டெல்லியில் இன்று ஒரே நாளில் 59 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 2,923 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,617 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 65 ஆயிரத்து 624 ஆக உள்ளது. மேலும் 26,148 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story