சீனாவை குறிப்பிட்டு பேச தயங்குவது ஏன்? - பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி


சீனாவை குறிப்பிட்டு பேச தயங்குவது ஏன்? - பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி
x
தினத்தந்தி 3 July 2020 11:27 PM IST (Updated: 3 July 2020 11:27 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் எந்த கூட்டத்திலும் சீனாவின் பெயரை குறிப்பிடாதது ஏன் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி,

இந்தியா-சீனா இடையே மோதல் நிலவி வரும் நிலையில் இன்று பிரதமர் மோடி, லடாக்கில் இருக்கும் நிம்மு ராணுவ முகாமிற்கு சென்று அங்கிருந்த இந்திய வீரர்களுடன் உரையாடினார். வீரர்கள் முன் பேசிய பிரதமர் மோடி தமிழில் திருக்குறள் ஒன்றை குறிப்பிட்டுப் பேசினார். பிரதமரின் பேச்சுக்கு கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் எந்த கூட்டத்திலும் சீனாவின் பெயரை குறிப்பிடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனத் துருப்புகளா அல்லது சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா?  என்று வினவி உள்ளார் . பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன், ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்  

Next Story