‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு
லடாக் எல்லைக்கு திடீரென்று சென்ற பிரதமர் மோடி, ராணுவ வீரர்கள் மத்தியில் பேசுகையில், கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம் என்றும், ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டதாகவும் கூறினார்.
புதுடெல்லி,
இந்திய-சீன எல்லையில் பதற்றம் நிலவும் சூழ்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி நேற்று திடீரென லடாக் சென்று ராணுவவீரர்களை சந்தித்து பேசினார். நிமு என்ற இடத்தில் உள்ள முகாமுக்கு சென்ற அவரை ராணுவ வீரர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பி வரவேற்ற காட்சி.
இந்தியாவுக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ந் தேதி அத்துமீற முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய வீரர்கள் தடுக்க முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சிலர் காயம் அடைந்தார்கள். சீன தரப்பில் 35-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிர் இழந்தனர்.
இதைத்தொடர்ந்து, அங்கு பதற்றம் ஏற்பட்டதால் அதை தணிக்க இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளின் மட்டத்திலும், தூதரக அதிகாரிகள் மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பதற்றத்தை தணிக்க இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட போதிலும், எல்லை அருகே சீனா படைகளை குவித்து வருகிறது. சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவும் அங்கு தனது படை பலத்தை அதிகரித்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. ராணுவ தளபதி நரவானே சமீபத்தில் லடாக் சென்று அங்குள்ள நிலவரத்தை ஆய்வு செய்துவிட்டு வந்தார்.
மோடி திடீர் லடாக் பயணம்
இந்த நிலையில், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று லடாக் செல்வதாக இருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக திடீரென்று பிரதமர் மோடி நேற்று காலை லடாக் சென்றார். அவருடன் முப்படைகளின் தலைவர் பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே ஆகியோரும் சென்றனர்.
எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், எந்த அறிவிப்பும் இல்லாமல் பிரதமர் மோடி திடீரென்று லடாக் சென்றது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
லடாக் பிராந்தியத்தில் சீன எல்லையை யொட்டிய லே பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள நிமு முகாமுக்கு மோடி ஹெலிகாப்டரில் சென்றார். சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தையொட்டி அமைந்துள்ள இந்த இடம் கரடு முரடானது மட்டுமின்றி, இங்குள்ள வானிலையும் மோசமானது.
எல்லை நிலவரம் பற்றி ஆய்வு
அங்கு எல்லை நிலவரம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்தார். எல்லையில் உள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து தரைப்படை, விமானப்படை, இந்திய-திபெத்திய பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் அங்குள்ள சூழ்நிலை பற்றி பிரதமரிடம் விளக்கி கூறினார்கள்.
பின்னர் அங்குள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய மோடி, அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பேசினார்.
அவர் பேசுகையில் கூறியதாவது:-
நாட்டின் பாதுகாப்பு
கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் இந்திய தாயின் பெருமை மிகுந்த மகன்கள். அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு என் வீரவணக்கத்தை செலுத்துகிறேன்.
சமீபத்தில் நீங்கள் காட்டிய தீரத்தையும், சீற்றத்தையும் இந்த உலகம் அறிந்தது. நமது வீரம் வழிவழியாக வந்த வரலாறு கொண்டது. இந்திய ராணுவத்தின் நெருப்பு போன்ற ஆக்ரோஷத்தை எதிரிகள் பார்த்து இருக்கிறார்கள்.
உங்களாலும், நீங்கள் காட்டும் உறுதியாலும் இந்தியா மேலும் வலுவடைந்து தற்சார்பு நிலையை அடையும். பாறை போன்ற மன உறுதியுடன் நீங்கள் எல்லையை காத்து நிற்கிறீர்கள். என் முன்னால் அமர்ந்து இருக்கும் பெண்கள் (ராணுவத்தில் பணியாற்றும் பெண்கள்) பெருமைக்கும், பாராட்டுக்கும் உரியவர்கள்.
இமயமலையை விட உயரம்
உங்களுடைய வீரமும், மனஉறுதியும் நீங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் இந்த இமயமலையை விட உயரமானது. உங்களுடைய வீரத்தை கண்டு இந்தியாவே பெருமை கொள்கிறது. நமது ராணுவ வீரர்களின் துணிச்சல் ஒவ்வொரு இந்தியருக்கும் முன்மாதிரியாக விளங்குகிறது. நாட்டின் பாதுகாப்பு ராணுவ வீரர்களான உங்கள் கையில்தான் இருக்கிறது. நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசமே உங்கள் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறது.
புல்லாங்குழல் வைத்திருக்கும் கிருஷ்ணரை மட்டுமல்ல; சுதர்சன சக்கரத்தை ஆயுதமாக வைத்திருக்கும் கிருஷ்ணரையும் நாம் வணங்குகிறோம். அமைதியை விரும்பும் நாம் தேவைப்பட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்க தயாராகவே இருக்கிறோம்.
எதிரிகளுக்கு தக்க பாடம்
இந்தியாவின் எதிரிகளுக்கு நமது ராணுவம் தக்க பாடம் புகட்டி இருக்கிறது. நமது எதிரிகளின் ஒவ்வொரு திட்டத்தையும் தவிடுபொடியாக்கிக் கொண்டிருக்கிறோம்.
அமைதி நிலவ வீரமும், தைரியமும் தேவை. நமது ராணுவ வீரர்களின் வீரத்துக்கு நிகர் எதுவும் இல்லை. உலகில் யாரையும் எதிர்கொள்ளும் சக்தி இந்திய ராணுவத்துக்கு உண்டு. இந்திய வீரர்களின் மனதைரியத்தை கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள். எதிரிகளின் எந்த திட்டமும் நம்மிடம் பலிக்கவில்லை.
சதி முறியடிப்பு
லடாக்கில் பயங்கரவாதத்தை உருவாக்க முயன்ற எதிரிகளின் சதி, தேசபக்தி கொண்ட மக்களால் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. நமது ராணுவ வீரர்களுக்கு லடாக் மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள்.
வீரம் என்பது அமைதியை நோக்கி செல்வது; அமைதியை எதிர்பார்ப்பது. பலவீனமானவர்கள் அமைதிக்கான நடவடிக்கையை தொடங்கமாட்டார்கள்.
உலகில் யாரையும் எதிர்கொள்ளும் சக்தி இந்தியாவுக்கு உண்டு. இதற்கு முன் நடைபெற்ற போர்களில் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது. எதிரிகளின் கோழைத்தனமான திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது.
கல்வான் இந்தியாவுக்கே சொந்தம்
இந்தியா அமைதியையும், நட்புறவையும் பேணி பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும் நாடு. அதேசமயம் யாரும் இதை நமது பலவீனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அமைதியை விரும்பும் நாம், நமது தாய்மண்ணை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம். இதில் நாம் அச்சம் கொள்ளப்போவது இல்லை. நாட்டை பாதுகாக்க எந்த தியாகத்துக்கும் தயாராக இருக்கிறோம்.
இந்தியா பலம் பொருந்திய நாடாக மாறி இருக்கிறது. தரைப்படை, கடற்படை, விமானப்படை என்று மட்டுமல்லாமல் விண்வெளி ஆய்விலும் நாம் பலம்பெற்று விளங்குகிறோம். நவீன ஆயுதங்கள், அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவது என்று நமது ராணுவம் பலமடங்கு பலம் பொருந்தியதாக மாறி இருக்கிறது. ராணுவத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.
சியாச்சென் முதல் கல்வான் பள்ளத்தாக்கு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி ஆகும். கல்வான் இந்தியாவுக்கு சொந்தமானது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எல்லையில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெறும். அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் ராணுவம் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.
ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்தது
நாடு பிடிக்கும் காலம் மலையேறிவிட்டது. ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது. ஆக்கிரமிக்கும் எண்ணத்தில் பேராசையுடன் செயல்பட்டோர் எப்போதுமே வீழ்ச்சியைத்தான் சந்தித்து இருக்கிறார்கள். அவர்கள் தோல்வி அடைந்து இருக்கிறார்கள் அல்லது விரட்டியடிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை வரலாறு நிரூபித்து இருக்கிறது.
நாடு பிடிக்கும் கொள்கை உலகத்துக்கு எதிரானது. இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நாடும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகின்றது. முன்னேற்றத்தை நோக்கி செல்லும் நாடுகளுக்குத்தான் புதிய உலகம் காத்து இருக்கிறது. எல்லை தாண்ட முயற்சிக்கும் நாடுகளுக்கு எதிர்காலம் கிடையாது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
ராணுவ வீரர்களுக்கு ஆறுதல்
கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் காயம் அடைந்த வீரர்கள் லேயில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பிரதமர் மோடி ஆஸ்பத்திரிக்கு சென்று அவர்களை பார்த்து ஆறுதல் கூறி உடல் நலம் விசாரித்ததோடு, அவர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, எதிரிகளுக்கு சரியான பதிலடி கொடுத்த உங்களை நினைத்து 130 கோடி இந்தியர்களும் பெருமை கொள்கிறார்கள் என்றும், உங்களுடைய வீரமும், துணிச்சலும் வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்றும் கூறினார்.

Related Tags :
Next Story