தேசிய செய்திகள்

இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா + "||" + India reports 442 deaths and highest single-day spike of 22,771 new #COVID19

இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் தினந்தோறும் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில்  இன்று  கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஒரே நாளில் 22 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்து 315  ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோல், கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 442 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,655 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பிலிருந்து  3,94,227 பேர் குணமடைந்துள்ள நிலையில்,  2,35,433 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. "தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2. மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 போலீசாருக்கு கொரோனா தொற்று
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை மேற்கோள் காட்டி மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்
கொரோனா பெருந்தொற்று நெருக்கடியை கையாள்வதில் மத்திய அரசு திறம்பட செயல்படவில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.
4. கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.84 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.84 கோடியாக உயர்ந்துள்ளது.