லடாக் பயணத்தின் போது சிந்து நதியில் பூஜை செய்த பிரதமர் மோடி


லடாக் பயணத்தின் போது சிந்து நதியில் பூஜை செய்த பிரதமர் மோடி
x
தினத்தந்தி 4 July 2020 11:43 AM IST (Updated: 4 July 2020 12:48 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி நேற்று லடாக் பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தின் போது சிந்து நதியில் சிந்து தர்ஷன் பூஜைகளை செய்துள்ளார்.

புதுடெல்லி,

லடாக்கில் உள்ள இந்திய ராணுவ தளத்திற்கு பிரதமர் மோடி நேற்றுசென்றார். அங்கு, சீன ராணுவ வீரர்களுடன் நடந்த  மோதலில்  காயம் அடைந்த  இந்திய வீரர்களை சந்தித்து, பிரதமர் மோடி நலம் விசாரித்தார். தனது பயணத்தின் போது நிமு பகுதி வழியாக ஓடும் சிந்து நதியில், பிரதமர் மோடி   சிந்து தர்ஷன் பூஜை செய்தார். இது குறித்த புகைப்படங்களை பிஐபி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பௌணர்மி நாளில் சிந்து நதிக்கரையில், சிந்து தரிசனம் திருவிழா கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழாவில், இந்தியாவின் ஒற்றுமை, அமைதியான சகவாழ்வு மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தின் அடையாளமாக பாவித்து சிந்து நதியை மக்கள் வணங்குகின்றனர். 

Next Story