ஆகஸ்ட் 15 க்குள் தடுப்பூசி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்பது அபத்தமானது - ஆபத்தானது விஞ்ஞானிகள் எச்சரிக்கை
ஆகஸ்ட் 15 க்குள் தடுப்பூசி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்பது அபத்தமானது மற்றும் ஆபத்தானது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
புதுடெல்லி
ஆகஸ்ட் 15-ஆம் தேதி பொதுப் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்துடன், மனிதர்களின் மீதான சோதனைகள் முடிக்கப்பட்டு மருத்துவமனைகளில் பயன்பாட்டுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தயாராகும் முதல் தடுப்பு மருந்து இது. இதனால் இது மத்திய அரசு மேற்பார்வையில் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்புடன் தயாராகி வருகிறது. அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பின்னர் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து பரிந்துரைகளும் கூட, இந்த வருடத்தின் முடிவில் வெளியாகும் என இருக்கும் நிலையில் கோவாக்ஸின் ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு மத்திய மருந்து தரநிர்ணய கட்டுப்பாட்டு கழகத்தின் மனிதர்களின் மீதான பரிசோதனையான முதல் கட்டம், 2-ஆம கட்ட பரிசோதனைக்கு அனுமதி உள்ளது.
ஜூலை 13-ஆம் தேதி முதல் கட்ட சோதனையை திட்டமிட்டுள்ளதன்படி, 1, 125 பேரின் மீது பரிசோதிக்கப்பட உள்ளது.
மூன்று கட்டங்களும் ஒன்றரை மாதங்களுக்குள் முடிக்கப்படக்கூடிய அளவிற்கு இதன் திறன் இருக்குமா எனவும், விரைவான கண்காணிப்பு சோதனைகளின் சாத்தியம் குறித்தும், பெரும்பாலான நிபுணர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.
ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கொரோனாவுக்கான கோவாக்ஸின் தடுப்பூசி தயாராகி விடும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிவிப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் நிறுவனத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களுக்கு இன்னும் சோதனை நடத்தப்படாத நிலையில் ஆய்வுக்குரிய நேரத்தை அளிக்காமல் தேதியை அறிவித்தது குறித்து பல்வேறு மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் நோயின் தீவிரமானப் பரவல் மற்றும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள நாடு தழுவிய அவசர நிலையால், தடுப்பூசியை விரைவாக பரிசோதிக்க , அதன் உரிமம் பெற்ற நிறுவனத்துககு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நெருக்குதல் அளித்து வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
"இது சாத்தியமானால் மகிழ்ச்சிதான். கொரோனா தடுப்பூசிகளின் வளர்ச்சியின் மேம்பட்ட கட்டங்களில் இருக்கும் உலகின் மிக லட்சிய நிறுவனங்கள் கூட நீண்ட கால அவகாசத்தைக் கேட்கின்றன ”என்று உலகளாவிய சுகாதாரம், உயிர்வேதியியல் மற்றும் சுகாதாரக் கொள்கை ஆராய்ச்சியாளர் டாக்டர் அனந்த் பன் கூறினார். "இது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது, ஏனென்றால் தடுப்பூசி திட்டம் இப்போது கட்டம் ஒன்று மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளுக்கு மட்டுமே நகர்கிறது என கூறி உள்ளார்.
தேசிய பணிக்குழுவின் மருத்துவ ஆராய்ச்சி குழுவின் தலைவரான எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறியதாவது:-
இது மிகவும் சவாலான மற்றும் கடினமான பணியாக இருக்கும், அறிமுகப்படுத்தப்படும் தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு இரண்டையும் நாம் கவனிக்க வேண்டும். மேலும், நாம் விரும்பிய முடிவுகளைப் பெற்றால், தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான செயல்முறையாகும் என கூறினார்.
இந்தியாவில் சுகாதார ஆராய்ச்சிக்கு நிதியளிக்கும் நன்கு அறியப்பட்ட வைராலஜிஸ்ட் மற்றும் வெல்கம் டிரஸ்ட்-டிபிடி கூட்டணியின் தலைமை நிர்வாகி ஷாகித் ஜமீல், ஆகஸ்ட் 15 காலக்கெடு என்பது “அபத்தமானது” என கூறினார்.
மேலும் அவர் கூறும் போது உலகளாவிய விஞ்ஞான சமூகம் இதற்காக நம்மைப் பார்த்து சிரிக்கும் என்று நான் அஞ்சுகிறேன். அது நடந்திருக்கக்கூடாது. இந்தியா அறிவியலில் தீவிரமான வீரர். நாம் இப்படி நடந்து கொண்டால் யார் நம்மை நம்பப் போகிறார்கள்? நாளை நாம் ஒரு நல்ல தடுப்பூசியைக் கொண்டு வந்தாலும் யார் நம்மை நம்பப் போகிறார்கள்?… மேலும் கடிதத்தில் பயன்படுத்தப்படும் மொழியைப் பார்த்து நான் திகைக்கிறேன். இது ஒரு கடிதம் அல்ல, அது அச்சுறுத்தல் போல உள்ளது என கூறினார்.
Related Tags :
Next Story