கேரளாவில் மீண்டும் ஒரு யானை பலி - வாயில் காயம் வெடிபொருள் காரணமா ?


கேரளாவில் மீண்டும் ஒரு யானை பலி - வாயில் காயம் வெடிபொருள் காரணமா ?
x
தினத்தந்தி 4 July 2020 10:52 PM IST (Updated: 4 July 2020 10:52 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் அட்டப்பாடி வனப்பகுதியில் உயிருக்கு போராடிய நிலையில் 5 வயது யானையை வனத்துறையினர் மீட்டனர்.


திருவனந்தபுரம்,

கேரள மாநிலம், பாலக்காடு அட்டப்பாடி வனப்பகுதியில், உயிருக்கு போராடிய நிலையில் 5 வயது யானையை வனத்துறையினர் மீட்டனர். அந்த யானைக்கு 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிசை பலனின்றி உயிரிழந்தது.  அதைத் தொடர்ந்து வனத்துறை உடற்கூராய்வு மேற்கொண்டதில், யானையின் வாயில் காயங்கள் காணப்பட்டுள்ளன. வெடிபொருள் வெடித்து உயிரிழந்ததா என்பது பற்றி , பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே விபரம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து தலைமை வன கால்நடை மருத்துவ அதிகாரி டாக்டர் அருண் சாகரியா கூறுகையில்,

யானையின் வாயின் எலும்பு முறிந்து காணப்பட்டது. வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை. யானை நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளது. அடிவயிற்றில் ஒரு கட்டியும் இருந்தது. வெடிபொருள் மாதிரிகளை சேகரித்து தடயவியல் சோதனைகளுக்கு அனுப்பியுள்ளோம். வெடிபொருள் பரிசோதனைக்கும் மாதிரிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றார்.

மே 27 தேதி, சைலண்ட் பள்ளத்தாக்கு காட்டில் 15 வயது கர்ப்பிணி காட்டு யானை பட்டாசுகளால் நிரப்பப்பட்ட ஒரு பழத்தை உட்கொண்டதால், அதன் வாய் வெடித்து கொடுமைக்கு ஆளானது இந்திய தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story