ரத யாத்திரைக்கு பிறகு கருவறைக்கு திரும்பினார் புரி ஜெகன்நாதர்
ஒடிசாவில் கோவில் நகரமான பூரியில் ஜெகந்நாதரின் ரத யாத்திரை ஜூன் 23 -ம் தேதி தொடங்கியது.
பாட்னா,
ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரை ஜூன் 23-ந் தேதி தொடங்கியது. இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக, இந்த யாத்திரையை தள்ளி வைக்க வேண்டும் என ஒடிசா விகாஸ் பரிஷத் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த யாத்திரை விழாவை தற்போது நடத்தினால் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்று அந்த தொண்டு நிறுவனம் அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தது. கடந்த 18-ந் தேதி இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஜெகன்நாதர் ஆலய ரத யாத்திரைக்கு தடை விதித்தது உத்தரவிட்டது.
இதனையடுத்து நீதிபதிகளின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து இந்த வழக்கு ஜூன் 22 நீதிபதி ரவீந்திர பட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரத யாத்திரைக்கு பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் அனுமதி அளிக்குமாறு மத்திய அரசு வாதிட்டது. பல நூற்றாண்டுகளின் பாரம்பரியம் நிறுத்தப்படக்கூடாது. இது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரிய விஷயம். பகவான் ஜெகன்நாதர் வெளியே வராவிட்டால், அவர் பாரம்பரியங்களின்படி 12 ஆண்டுகள் வெளியே வர முடியாது என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோர்ட்டில் வாதாடினார். இதனையடுத்து ஓடிசா மாநிலம், பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்டத்திற்கு அனுமதியளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், கோவில் நகரமான பூரியில் கடவுள் ஜெகந்நாதரின் ரத யாத்திரை ஜூன் 23 பாரம்பரிய முறையப்படி தொடங்கியது.
ஜூன் 23-ம் தேதி தங்கள் அத்தையின் இருப்பிடமான குண்டிச்சா ஆலயம் நோக்கிச் சென்ற ரத யாத்திரை மவுசிமா கோவிலில் பகவான் ஜெகன்நாதர் தங்கி ஓய்வெடுத்தார். அதன்பிறகு சகோதர சகோதரியின் தேர்கள் புடைசூழ ஜெகந்நாதரின் ரத யாத்திரை மீண்டும் கிளம்பி தங்கள் இருப்பிடமான ஜெகந்நாதர் கோவிலை வந்தடைந்தது.
ஜெகந்நாதரின் தேர் 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேராகும். 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரர் எனப்படும் பலராமரும், 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் ஜெகந்நாதரின் தங்கையான சுபத்திரை தேவியும் நகர்வலம் வந்தார்கள்.
தேரோடும் 'ரத்ன வீதி'யைத் பொன்னாலான துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி சுத்தம் செய்வார். முதலில் மூத்த சகோதர பலராமரின் தேரும், அதன் பின்னர் தங்கை சுபத்திரை தேவியின் தேரும் நகர்வலம் தொடங்கியது. இறுதியாக ஜெகந்நாதரின் ரதம் கிளம்பியது.
நேற்று அதாரா பனா என்ற சடங்கில் பால், சர்க்கரை, சீஸ், வாழைப்பழம், கற்பூரம், ஜாதிக்காய் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றால் ஆன பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இனிப்பு பானம் (பனா) வழங்கப்பட்டது.
கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான சேவையாளர்களால் நிகழ்த்தப்பட்டன. சேவையாளர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், மேலும் கொரோனா வைரஸ் டெஸ்ட்டில் நெகட்டிவ் வந்தவர்கள் மட்டுமே திருவிழாவின் போது தேர் இழுத்தல் மற்றும் பிற நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு மெகா நிகழ்வைக் காண உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் வீட்டிலேயே இருந்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தனர்.
வருடாந்திர ரத யாத்திரையை நடத்துவதில் நிர்வாகத்துடன் ஒத்துழைத்த மக்களுக்கும், குறிப்பாக பூரி நகரவாசிகளுக்கும் அம்மாமாவட்ட ஆட்சியர் பால்வந்த் சிங் நன்றி தெரிவித்தார்.
ஒரு ஆண்டு பயன்படுத்தப்படும் தேர் மறு ஆண்டு பயன்படுத்தப்படுவதில்லை. ஆண்டுதோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய ரதங்கள் உருவாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story