லடாக்கில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு


லடாக்கில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
x
தினத்தந்தி 5 July 2020 6:19 AM IST (Updated: 5 July 2020 6:19 AM IST)
t-max-icont-min-icon

லடாக், கார்கில் பகுதிகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கார்கில்,

லடாக் மற்றும் கார்கில் பகுதிகளில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.  அதிகாலை 3.37 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் லேசான அதிர்வுகள் இருந்தது.  நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

முன்னதாக, கடந்த 2 ஆம் தேதியும் லடாக், கார்கில் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்  4.5 ஆக பதிவானது. 

Next Story