மராட்டியத்தில் இன்று மேலும் 6,555 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 6,555 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அங்கு மாநிலம் முழுவதும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று ஒரேநாளில் புதிதாக 6,555 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,06,619 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல மராட்டியத்தில் இன்று 151 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 822 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 3,658 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,740 ஆக உயர்ந்துள்ளது. 86,040 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story