தாஜ்மஹால் மீண்டும் திறக்க வாய்ப்பில்லை


தாஜ்மஹால் மீண்டும் திறக்க வாய்ப்பில்லை
x
தினத்தந்தி 5 July 2020 11:07 PM IST (Updated: 5 July 2020 11:07 PM IST)
t-max-icont-min-icon

ஆக்ராவில் கொரோனா காரணமாக தாஜ்மஹால் மீண்டும் திறக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச்  மாதம் 25 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கை முன்னிட்டு  நாடு முழுவதும் சுற்றுலாத்தளங்கள், புராதான சின்னங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை மூடப்பட்டன.

தற்போது, நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை( ஜூலை 6) ஆம் தேதி முதல்  அனைத்து நினைவுச் சின்னங்களையும் திறக்கலாம் என, மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், ஆக்ராவில் கொரோனா காரணமாக உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. தாஜ்மஹால் தாஜ்கஞ்ச் என்ற காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்டது, இது தற்போது ஒரு கட்டுப்பாட்டு மண்டலமாக உள்ளது. ஆக்ரா கோட்டை, தாஜ்மஹால் போன்ற சுற்றுலா தலங்கள் தற்போது திறக்கப்பட்டால் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ரா மாவட்டத்தில் நினைவுச்சின்னங்கள் இப்போது திறக்கப்படாது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Next Story