2021 ஜூலை வரை மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம் - கேரள அரசு உத்தரவு


2021 ஜூலை வரை மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம் -  கேரள அரசு உத்தரவு
x
தினத்தந்தி 5 July 2020 11:33 PM IST (Updated: 5 July 2020 11:33 PM IST)
t-max-icont-min-icon

2021 ஜூலை வரை மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம் என்று கேரள அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

திருவனந்தபுரம்,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளாவில் பெருமளவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில்  மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை அடுத்த ஒரு வருடத்திற்கு (2021 ஜூலை) கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பணியிடங்களிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களிலும் 6 அடி சமூக இடைவெளி கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. திருமணங்களில் 50 பேருக்கும், இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதிகாரிகளின் முன் அனுமதி இன்றி  ஊர்வலங்கள், பார்ட்டிகள், மாநாடு, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது.

அனுமதி கிடைத்தாலும் 10 பேருக்கு மிகாமல் பங்கெடுக்க மட்டுமே அனுமதிக்கப்படுவர்.  மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு பாஸ் தேவையில்லை என்றாலும். அப்படி செல்பவர்கள் அரசின் -ஜாக்கிரதா- என்ற தளத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Next Story