காஷ்மீரில், குண்டுவெடித்து துணை ராணுவ வீரர் படுகாயம்


காஷ்மீரில், குண்டுவெடித்து துணை ராணுவ வீரர் படுகாயம்
x
தினத்தந்தி 6 July 2020 2:03 AM IST (Updated: 6 July 2020 2:03 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில், குண்டுவெடித்து துணை ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார்.

ஸ்ரீநகர்,

தெற்குகாஷ்மீரின் புல்வாமா மாவட்டம் ஸ்ரீநகர்-புல்வாமா சாலையில் கோங்கூ என்ற இடத்தில் நேற்று காலை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த குறைந்த திறன் கொண்ட வெடிகுண்டு வெடித்தது. இதில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் புல்வாமாவில் உள்ள மற்றொரு பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களை குறி வைத்து தாக்குவதற்காக புதைத்து வைக்கப்பட்டிருந்த மற்றொரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பபட்டது. பின்னர் அதனை செயலிழக்க செய்தனர். இதனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

உரிய நேரத்தில் வெடிகுண்டை கண்டுபிடித்து செயலிழக்கச்செய்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த நாசவேலைக்கு காரணமான பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகிறார்கள்.

Next Story