கொட்டி தீர்த்த மழையால் மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது மேலும் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
மும்பையில் 3-வது நாளாக கொட்டித்தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.
மும்பை,
மும்பையில் 3-வது நாளாக கொட்டித்தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. அடுத்த 2 நாட்களுக்கும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் திண்டாடி வரும் மராட்டியத்தில் மும்பை மற்றும் அதையொட்டி உள்ள கடலோர மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் மும்பை நகரம் வெள்ளக்காடானது. நேற்றும் மும்பையில் 3-வது நாளாக மழை வெளுத்து வாங்கியது.
இதனால் மும்பை நகரம் வெள்ளத்தில் மிதந்தது. குறிப்பாக தாழ்வான பகுதிகள் மழைநீரில் தத்தளித்தன. இதில் தாராவி ரெஸ்ட்ரான்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதேபோல நகரில் பல பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், குடிசைப்பகுதிகளும் தண்ணீரில் தத்தளித்தன.
மழையையொட்டி அரபிக்கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. குறிப்பாக மதியம் கடல் அலை சீற்றம் அதிகமாக இருந்தது.
கனமழை காரணமாக ஒரு சில இடங்களில் மரம் விழுந்தது. சுவர் இடிந்து விழுந்தது. மின்கசிவு பிரச்சினை போன்றவற்றை தவிர பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மும்பையை போல நேற்று தானே, நவிமும்பை, பால்கர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அங்கு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தானேயில் தண்டவாளங்களிலும் மழைநீர் தேங்கியது.
தானே தெலிகல்லி பகுதியில் பாழடைந்த ஒரு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
மும்பையை பொறுத்தவரை நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நகரில் 13 செ.மீ. மழையும், புறநகரில் 20 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக போரிவிலியில் 21 செ.மீ. மழையும், விக்ரோலி, செம்பூரில் 20 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது. தாராவியில் 19 செ.மீ. மழை பதிவானது.
தானேயில் 37 செ.மீ. மழையும், பால்கரில் 9 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது.
இதற்கிடையே அடுத்த 2 நாட்களுக்கும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், ’மராட்டியத்தின் பல பகுதிகளில் இன்றும்(திங்கட்கிழமை), நாளையும்(செவ்வாய்க் கிழமை) கனமழை தொடரும். அப்போது மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். மும்பை, தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி போன்ற கடலோர மாவட்டங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும்.
எனவே மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்‘ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story