இந்தியாவில் ஒரே நாளில் 24,248 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று


இந்தியாவில் ஒரே நாளில் 24,248  பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
x
தினத்தந்தி 6 July 2020 9:52 AM IST (Updated: 6 July 2020 9:52 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24,248 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 24,248 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஒரே நாளில் 425 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம், இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,97,413 ஆக உள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19,693 ஆக உயர்ந்துள்ளது. 

 நாடு முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,433 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 2,53,287 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story