பான் கார்டுடன் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு
பான் கார்டுடன் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு வரை வருமான வரித்துறை நீட்டி உள்ளது.
புதுடெல்லி,
பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கு கடந்த மாதம் 30-ந்தேதி வரை வருமான வரித்துறை காலக்கெடு அளித்து இருந்தது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு சேவைகள் முடங்கி உள்ளன. இதை கருத்தில் கொண்டு இந்த காலக்கெடுவை அடுத்த ஆண்டு (2021) மார்ச் 31-ந்தேதி வரை வருமான வரித்துறை நீட்டி உள்ளது.
இது குறித்து வருமான வரித்துறை தனது டுவிட்டர் தளத்தில், ‘நாம் இருக்கும் இந்த நேரத்தை புரிந்து கொண்டு, பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து உள்ளோம். அதன்படி பான்கார்டு-ஆதார் இணைப்பை 2021 மார்ச் 31-ந்தேதி வரை மேற்கொள்ளலாம். இந்த காலக்கெடு நீட்டிப்பு உங்களுக்கு பயன் அளிக்கும் என நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டு உள்ளது.

Related Tags :
Next Story