தேசிய செய்திகள்

செவ்வாய்கிரகத்தின் 82 கிலோமீட்டர் அகலம் கொண்ட பனிப்பள்ளம் சிலிர்ப்பூட்டும் வீடியோ + "||" + Watch: ESA’s stunning video of icy Korolev crater on Mars

செவ்வாய்கிரகத்தின் 82 கிலோமீட்டர் அகலம் கொண்ட பனிப்பள்ளம் சிலிர்ப்பூட்டும் வீடியோ

செவ்வாய்கிரகத்தின் 82 கிலோமீட்டர் அகலம் கொண்ட பனிப்பள்ளம் சிலிர்ப்பூட்டும் வீடியோ
செவ்வாய்கிரகத்தில் உள்ள 82 கிலோமீட்டர் அகலம் கொண்ட பனிப்பள்ளம் குறித்த சிலிர்ப்பூட்டும் வீடியோவை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்பு வெளியிட்டு உள்ளது.
புதுடெல்லி

மேலே உள்ள படத்தைப் பாருங்கள்… .உங்கள் அடுத்த விடுமுறையைப் கொண்டாட இந்த  அழகான இடத்திற்குச் செல்ல விருப்பமா? ஆனால் செல்ல முடியாது. இந்த இட செவ்வாய் கிரகத்தில் இருப்பதால் இந்த இடத்தைப் பார்வையிடுவது நமக்கு சாத்தியமில்லை. 

கோரொலெவ் பள்ளம் என்று அழைக்கப்படும் இந்த செவ்வாய் கிரகத்தின் பனிப்பள்ளத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (ஈஎஸ்ஏ) மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிட்டரால் படமபிடிக்கப்பட்டு உள்ளது.

82 கி.மீ அகலமுள்ள கோரோலெவ் பள்ளம் செவ்வாய் கிரகத்தின் வடக்கு தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது செவ்வாய் கிரகத்தின் வடக்கு துருவத் தொப்பியை ஓரளவு சூழ்ந்துள்ளது என்று ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மைய இணையதளத்தில் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளம் பனியால் நிரம்பியுள்ளது, அதன் மையம் ஆண்டு முழுவதும் 1.8 கிலோமீட்டர் தடிமன் கொண்ட ஒரு மண் நீர் பனியைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் நிரந்தரமாக நிலையான நீர் இருப்பத் பனிக்கு காரணம், அதன் ஆழமான பகுதி இயற்கையான குளிர் பொறியாக செயல்படுவதால். பனிக்கு மேலே உள்ள காற்று குளிர்ந்து, சுற்றியுள்ள காற்றோடு ஒப்பிடும்போது கனமாக இருக்கிறது.

டிசம்பர் 2018 இல் முதன்முதலில் வெளியிடப்பட்ட மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஹை ரெசல்யூஷன் ஸ்டீரியோ கேமரா (எச்.ஆர்.எஸ்.சி) கைப்பற்றிய படங்களையும், எச்.ஆர்.எஸ்.சி நாடிர் மற்றும் வண்ண சேனல்களின் தரவையும் பயன்படுத்தி பிரமிக்க வைக்கும் கொரோலெவ் பள்ளத்தின் வீடியோ உருவாக்கப்பட்டது என்று ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கூறி உள்ளது.இந்த வீடியோ கடந்த 2 ந்தேதி வெளியிடப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பி சாதனை: ஐக்கிய அரபு அமீரக திட்டத்தை வழி நடத்திய பெண்
செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பி சாதனை புரிந்த ஐக்கிய அரபு அமீரக திட்டத்தை ஒரு பெண் தலைமை தாங்கி வழிநடத்தி உள்ளார்.
2. செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் மிக நெருக்கத்தில் படம் பிடித்தது
செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் மிக நெருக்கத்தில் படம் பிடித்து உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...