கர்நாடக மாநிலத்தில் இன்று 1,498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாநில சுகாதாரத்துறை தகவல்
கர்நாடகாவில் இன்று 1,498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,815 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் 571 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கர்நாடகாவில் தற்போது கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 416 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,098 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலம் முழுவதும் தற்போது 15,297 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் உள்ளவர்களில் 279 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Tags :
Next Story