இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 8 July 2020 4:18 AM GMT (Updated: 8 July 2020 4:18 AM GMT)

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்துக்கு 42 ஆயிரத்தை கடந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிவேகமெடுத்துள்ளது. 6 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு 5 நாட்களில் 7 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் முதல் 1 லட்சம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்க கொரோனா 110 நாட்கள் எடுத்துக் கொண்டது. ஆனால் அடுத்த 49 நாட்களில் 6 லட்சம் பேரை தாக்கி இருக்கிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  இன்று  காலை வெளியிட்ட புள்ளி விவர பட்டியலில், 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 752 பேரை நோய்த்தொற்றுக்கு உள்ளாக்கிய கொரோனா, புதிதாக 482 பேரின் உயிரையும் பறித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து  42 ஆயிரத்து 417 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து  642 ஆகவும் அதிகரித்து இருக்கிறது.

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் , 4 லட்சத்து 56 ஆயிரத்து 831 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 2 லட்சத்து 64 ஆயிரத்து 944 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story