6 மாதங்களாக உலகை ஆட்டுவிக்கும் கொரோனா வைரசை சுற்றி விலகாத 5 மர்மங்கள்


6 மாதங்களாக உலகை ஆட்டுவிக்கும் கொரோனா வைரசை சுற்றி விலகாத 5 மர்மங்கள்
x
தினத்தந்தி 8 July 2020 10:48 AM IST (Updated: 8 July 2020 10:48 AM IST)
t-max-icont-min-icon

6 மாதங்களாக உலகை ஆட்டுவிக்கும் கொரோனா வைரசை சுற்றி இன்று கண்டுபிட்க்கமுடியாத 5 க்கும் மேற்பட்ட மர்மங்கள் உள்ளதாக விஞ்ஞான இதழான நேச்சர் கூறி உள்ளது.

புதுடெல்லி

2020 ஆம் ஆண்டின் பாதிக்கும் மேல்  கடந்துவிட்டது மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் சமீபத்தில் உலகளவில் 1.10 கோடியை தாண்டிஉள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகத் தெரியவில்லை. உலகெங்கிலும் உள்ள 50 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகள் (60 லடசத்துக்கும் அதிகமானவர்கள்) ஆபத்தான தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர், அதே நேரத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 7 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுடன், அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு சீனாவின் உகானில் முதன்முதலில் வெடித்த இந்த கொரோனா வைரசுக்கு தேவையான சிகிச்சைகளையோ தடுப்பூசிகளோ கண்டறியப்படவில்லை. இந்த கொரோனா வைரஸ் உடவானதில் இருந்து அதனுடன் தொடர்புடைய பல மர்மங்கள் உருவாகி உள்ளன.

விஞ்ஞான இதழான நேச்சரில்  கொரோனா வைரஸுடன் இணைக்கப்பட்ட ஐந்து மர்மங்களுக்கான பதில்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என கூறி உள்ளது. 

இதுவரை, விஞ்ஞானம் வைரஸ் “உயிரணுக்களில் எவ்வாறு நுழைகிறது மற்றும் கடத்துகிறது, சிலர் அதை எவ்வாறு எதிர்த்துப் போராடுகிறார்கள், இறுதியில் மற்றவர்களை அது எப்படிக் கொல்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது.

நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு பயனளிக்கும் மருந்துகளை அடையாளம் கண்டுள்ளனர், மேலும் பல சாத்தியமான சிகிச்சைகள் செயல்பாட்டில் உள்ளன.

விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட 200 சாத்தியமான தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளனர் - அவற்றில் எதாவது இந்த ஆண்டு இறுதிக்குள் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறி உள்ளது.

இருப்பினும், இந்த நோயைப் பற்றி ஆராய்ச்சியாளர்களிடம் இன்னும் பதில்கள் இல்லாத சில முக்கிய கேள்விகளை பத்திரிகை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது அதன் விவரம் வருமாறு:-

1. ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான அறிகுறிகளை கொடுப்பதற்கு என்ன காரணம்?

குழந்தைகள் மற்றும் முதியவர்கள், குறிப்பாக நாட்பட்ட நோய் உள்ளவர்கள் வைரஸால் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் நோயின் தீவிரத்தை அனுபவிக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை, இருப்பினும், வைரசுக்கு மக்கள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான அறிகுறிகளை கொடுப்பதற்கு என்ன காரணம் என்பதை இன்னும் புரிந்து கொள்ள வேண்டும்.

2. நோய் எதிர்ப்பு சக்தியின் தன்மை என்ன, அது எவ்வளவு காலம் நீடிக்கும்?

கொரோனா வைரஸ் நோய்க்கான நோய் எதிர்ப்பு சக்தி எப்படி இருக்கும், அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை தீர்மானிக்க நோயெதிர்ப்பு  நிபுணர்களும் முயற்சித்து வருகின்றனர்.

"சார்ஸ் கோவ்-2 க்கு எதிரான நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளின் அளவு தொற்றுநோய்க்குப் பின்னர் சில வாரங்களுக்கு அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன, ஆனால் பின்னர் அவை பொதுவாகக் குறையத் தொடங்குகின்றன. ஆறு மாத கொரோனா வைரஸ் மர்மத்தை கண்டறிய  விஞ்ஞானிகள் இன்னும் ஓடுகிறார்கள் 

3. வைரஸ் கவலைப்படக்கூடிய பிறழ்வுகளை உருவாக்கியதா?

கடந்த ஆண்டு சீனாவில் முதன்முதலில் வடிவம் பெற்ற கொரோனா வைரஸ் பின், கண்டம் முழுவதும் பயணித்ததால், வைரஸின் பிறழ்வைச் சுற்றியே பல ஊகங்கள் உள்ளன.

4. ஒரு தடுப்பூசி எந்த அளவு நன்றாக வேலை செய்யும்?

வளர்ந்து வரும் வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகள் குழு கொரோனா தடுப்பூசி வெகுஜனங்களுக்கு வேண்டாம் என்று நம்புகிறது, ஏனெனில் பெரும்பாலான மக்கள் தொற்றுநோயிலிருந்து சொந்தமாக மீண்டு வருகிறார்கள். இந்த தடுப்பூசி முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் இணை நோயுற்றவர்கள் போன்ற சமூகத்தின் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு மட்டும் பயன்படலாம். ஆனால் வைரஸுக்கு எதிராக இது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது இன்னும் மதிப்பிடப்படவில்லை.

5. வைரஸ் எதில் இருந்து தோன்றியது?

இது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. வவ்வால்கள் முதல் எறும்பு திண்ணிகள் வரை, சீனாவில் பிறந்த வைரஸின் தோற்றம் பற்றிய கோட்பாட்டைச் சுற்றி பல ஊகங்கள் எழுந்துள்ளன.

"சீனாவில் வவ்வால்களில் இருந்து எடுக்கப்பட்ட 1,200 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ்களின் விரிவான பகுப்பாய்வு, புதிய கொரோனா வைரஸின் தோற்றம் யுனானில் உள்ள  வவ்வால்களையும் சுட்டிக்காட்டுகிறது," என்று அதில் கூறப்பட்டு உள்ளது

Next Story