பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை


பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 8 July 2020 12:14 PM IST (Updated: 8 July 2020 12:14 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி கல்யான் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

லடாக் மோதல் விவகாரம், கொரோனா பிரச்சினை உள்ளிட்டவைகள் குறித்தும் பாராளுமன்ற கூட்டத்தொடரை மெய்நிகர் என்று சொல்லப்படும் விர்ஷுவல் கூட்டமாக நடத்தலாமா? என்பது குறித்தும் ஆலோசனை நடக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Next Story