பிரேசில் அதிபருக்கு கொரோனா: விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் - பிரதமர் மோடி
எனது நண்பா் ஜெயீர் போல்சனாரோவிற்கு கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து விரைந்து குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
உலக அளவில் கொரோனோ வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் 2வது இடத்தில் உள்ளது.
நேற்று மதிய நிலவரப்படி அங்கு வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 23 ஆயிரத்து 284 ஆக இருந்தது. அதேபோல் பலி எண்ணிக்கை 65 ஆயிரத்து 487 ஆக இருந்தது.
கொரோனா விவகாரத்தில் அந்த நாட்டின் அதிபர் ஜெயீர் போல்சனாரோவின் அலட்சியப்போக்கே வைரஸ் பாதிப்பு அதிகமாகுவதற்கு காரணம் என அங்கு குற்றச்சாட்டு நிலவுகிறது.
இந்த நிலையில் தனக்கு கொரோனோ வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக அதிபர் ஜெயீர் போல்சனாரோ தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது இதனை தெரிவித்த அவர் தனது உடல் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாகவும், ரத்த ஆக்ஜிசன் அளவு 96 சதவீதமாகும் இருப்பதாக கூறினார்.
இதன் காரணமாக முக்கிய சந்திப்புகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளதாக கூறிய அவர் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.
இந்நிலையில் பிரதமா் மோடி டுவிட்டர் பதிவில், 'எனது நண்பா் ஜெயீர் போல்சனாரோவிற்கு கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து விரைந்து குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறி உள்ளார். இந்தப் பதிவை அவா் போர்ச்சுக்கீசியம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளார்.

Related Tags :
Next Story