தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் + "||" + there's no community transmission: Health Min Harsh Vardhan

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவில்   கொரோனா  மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  7. 67 லட்சமாக உள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.  இந்தியாவில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் மேலாக பதிவாகி வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.  மந்திரிகள் குழுவை சந்தித்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஹர்ஷவர்தன், “ நிபுணர்களுடன் இன்று நடைபெற்ற ஆலோசனையின் போது, இந்தியாவில் கொரோனா இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சில இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்பட்டாலும் தேசிய அளவில் இன்னும் இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை. மக்கள் தொகை அதிகமாக இருப்பதால்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
2. இந்தியாவில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 49 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்
இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில், கொரோனா பாதித்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 48 ஆயிரத்து 900 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.
3. மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிப்பு
மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
4. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 67.98 சதவீதமாக உயர்வு
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 67.98 சதவீதமாக உயர்ந்துள்ளது.
5. இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும் - பிரதமர் நரேந்திர மோடி
இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.