இந்தியாவில், பொருளாதார மீட்சியில் பச்சை தளிர்களை நாம் காண்கிறோம் - பிரதமர் மோடி
இந்தியாவில், பொருளாதார மீட்சியில் பச்சை தளிர்களை நாம் காண்கிறோம் என்பதில் ஆச்சரியமில்லை என பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி
டெல்லியில் நடைபெறும் மூன்று நாள் இணைய வழி குளோபல் வீக் மாநாட்டில் 5000 பேர் பங்கேற்று உள்ளனர். 30 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். குளோபல் வீக் மாநாட்டில் பிரதமர் மோடி உரையற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உலகளவில் பொருளாதார மீட்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.திறமையாளர்களின் மையமாக இந்தியா திகழ்கிறது.
இந்தியா தன்னை எப்போதும் புதுப்பித்துக் கொண்டு வளர்கிறது. இந்தியா கொரோனாவுக்கு எதிராக வலுவான யுத்தத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்தியா கொரோனாவுக்கு எதிராக வலுவான யுத்தத்தை மேற்கொண்டு வருகிறது. உலகமே இந்தியாவின் திறமையை அங்கீகரித்துள்ளது.இந்தியாவில் பல்வேறு துறைகளில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இந்தியாவில் பல புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கேற்ப சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா உலகின் மிக திறந்த பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. அனைத்து உலகளாவிய நிறுவனங்களும் வந்து இந்தியாவில் தங்கள் இருப்பை நிலைநாட்ட நாங்கள் சிவப்பு கம்பளம் விரிக்கிறோம். இந்தியா இன்று செய்யும் வாய்ப்புகளை மிகச் சில நாடுகள் மட்டுமே வழங்கும்.
இந்தியாவின் மருந்தியல் தொழில் இந்தியாவுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் ஒரு சொத்து என்பதை இந்த தொற்றுநோய் மீண்டும் காட்டுகிறது. மருந்துகளின் விலையை குறைப்பதில் இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது, குறிப்பாக வளரும் நாடுகளுக்கு.
சாத்தியமற்றது என்று நம்பப்படுவதை அடைய இந்தியர்களுக்கு ஆற்றல் இருக்கிறது. இந்தியாவில், பொருளாதார மீட்சியின் பச்சை தளிர்களை நாம் ஏற்கனவே காண்கிறோம் என்பதில் ஆச்சரியமில்லை என கூறினார்.
Related Tags :
Next Story