கொரோனா தடுப்பூசியின் வளர்ச்சி -உற்பத்திக்கான சர்வதேச முயற்சிகளில் நமது நிறுவனங்களும் தீவிரமாக உள்ளன- பிரதமர் மோடி
கொரோனா தடுப்பூசியின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கான சர்வதேச முயற்சிகளில் இன்று நமது நிறுவனங்களும் தீவிரமாக உள்ளன என பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி
இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான, 2020 இந்தியா குளோபல் வீக் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, கொரோனாவுக்கு எதிரான வலுவான போரை இந்தியா நடத்தி வருவதாக மோடி குறிப்பிட்டார்.
மாநாட்டில் பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:-
இந்தியாவின் மருந்தகத் துறை, உற்பத்தி உலகத்திற்கே முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது. இதன்மூலம் வளர்ந்து வரும் நாடுகளின் மருத்துவச் செலவுகளை இந்தியா குறைத்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் உலக குழந்தைகளின் தடுப்பூசி தேவைகளில் 3 இல் இரண்டு பங்கை பூர்த்தி செய்கின்றன. கொரோனா தடுப்பூசியின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கான சர்வதேச முயற்சிகளில் இன்று நமது நிறுவனங்களும் தீவிரமாக உள்ளன.
தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதை உருவாக்குவதிலும், உற்பத்தியை அதிகரிப்பதிலும் இந்தியாவுக்கு முக்கிய பங்கு இருக்கும் என்று நான் நம்புகிறேன் என கூறினார்.
Related Tags :
Next Story