கொரோனா பாதிப்பு சமூக பரவலாக இன்னும் மாறவில்லை; மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா பாதிப்பு சமூக பரவலாக இன்னும் மாறவில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவால் 7.67 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை 21,129 ஆக உயர்வடைந்து உள்ளது. எனினும், மக்கள் தொகை அடர்த்தியுடன் ஒப்பிடும்பொழுது, அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில், இந்தியா குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாளொன்றுக்கு சராசரியாக 2.6 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு சமூக பரவலாக இன்னும் மாறவில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் சமூக பரவலாக இன்னும் மாறவில்லை.
ஒரு சில இடங்களிலேயே அது அதிகளவில் உள்ளது என்று தெரிவித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகளவு இருப்பதற்கும் மற்றும் சமூக பரவல் பற்றியும் உலக சுகாதார அமைப்பு ஆனது இறுதியான வரையறை எதனையும் தெரிவிக்கவில்லை. உள்ளூர் நிலவரங்கள் பற்றி ஆய்வு செய்து அதுபற்றிய அறிக்கை அளிக்கும்படியே அவர்கள் உரிமை வழங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story