மும்பை தாராவியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மும்பை தாராவியில் இன்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வந்த நிலையில், மராட்டிய அரசு, தாராவியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தியதன் மூலம் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
இந்த நிலையில், மும்பை தாராவியில் இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2,347 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தாராவியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக உள்ளது.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 291 பேர் சிகிச்சையில் உள்ளநிலையில், கொரோனா தொற்றில் இருந்து 1,815 பேர் குணமடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story