பீகாரில் என்கவுண்ட்டர்: 4 நக்சலைட்டுகள் சுட்டு கொலை; உயர்ரக ஆயுதங்கள் பறிமுதல்


பீகாரில் என்கவுண்ட்டர்:  4 நக்சலைட்டுகள் சுட்டு கொலை; உயர்ரக ஆயுதங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 July 2020 9:29 AM (Updated: 10 July 2020 9:29 AM)
t-max-icont-min-icon

பீகாரில் கூட்டு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டதுடன் உயர்ரக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

சம்பரான்,

பீகாரின் பச்சிம் சம்பரான் மாவட்டத்தில் பகாகா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியுள்ளனர் என தகவல் கிடைத்து, சகஸ்திரா சீமா பால் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் கூட்டாக இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் கூட்டு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  சகஸ்திரா சீமா பால் படையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து ஏ.கே. 56 ரக துப்பாக்கி, எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கி உள்ளிட்ட உயர்ரக ஆயுதங்களை பறிமுதல் செய்து உள்ளனர்.

Next Story