டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 10வது தளத்தில் இருந்து குதித்து டாக்டர் தற்கொலை


டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 10வது தளத்தில் இருந்து குதித்து டாக்டர் தற்கொலை
x
தினத்தந்தி 10 July 2020 8:59 PM IST (Updated: 10 July 2020 8:59 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 10வது தளத்தில் இருந்து குதித்து இளநிலை டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 25 வயது நிறைந்த இளநிலை டாக்டர் மனநல துறையில் பணியாற்றி வந்துள்ளார்.  இந்நிலையில், அவர் மருத்துவமனையின் தங்கும் விடுதியில் உள்ள 10வது தளத்தில் இருந்து இன்று மாலை 5 மணியளவில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரது மொபைல் போனை விடுதி மேற்கூரையில் இருந்து அதிகாரிகள் எடுத்துள்ளனர்.  அவருக்கு மனஅழுத்தம் இருந்துள்ளது என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.  இதுபற்றி அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், டாக்டரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  அவரது நிலை கவலைக்குரிய வகையில் உள்ளது என நிர்வாகம் தெரிவித்தது.  இதனை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 37 வயது நிறைந்த பத்திரிகை நிருபர் ஒருவர் 4வது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட ஒரு வாரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Next Story