திருவனந்தபுரத்தில் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கேரள முதல்வர் அறிவிப்பு


திருவனந்தபுரத்தில் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கேரள முதல்வர் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 July 2020 9:58 PM IST (Updated: 10 July 2020 9:58 PM IST)
t-max-icont-min-icon

திருவனந்தபுரத்தில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்று ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,951 ஆக உயர்ந்துள்ளது. அங்கு தற்போது 3,099 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவனந்தபுரத்தில் பூந்துறை பகுதியில் மிக வேகமாக நோய் பரவி வருகிறது. கேரளா தற்போது நோய்ப் பரவலில் மிக முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளதாகவும் சமூகப் பரவல் என்ற அபாய கட்டத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவனந்தபுரத்தில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Next Story