மராட்டிய சிறைகளில் 763 பேருக்கு கொரோனா


மராட்டிய சிறைகளில் 763 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 July 2020 1:43 AM IST (Updated: 11 July 2020 1:43 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சிறைகளில் 763 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மும்பை, 

கொரோனா தொற்று மராட்டியத்தில் அதிதீவிரமாக பரவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டபோதிலும், மராட்டிய சிறைகளில் 596 கைதிகள் மற்றும் 167 காவலர்கள், ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக நாக்பூர் சிறையில் 219 பேரும், 57 ஊழியர்களும் அடங்குவர்.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 281 கைதிகள் மற்றும் 93 ஊழியர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 4 கைதிகள் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாக சிறைத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story