கொரோனா விவகாரம்; காங்.எம்.பிக்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை


கொரோனா விவகாரம்;  காங்.எம்.பிக்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 11 July 2020 7:29 AM IST (Updated: 11 July 2020 7:29 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் மக்களவை எம்.பிக்களுடன் காணொலி காட்சி வாயிலாக சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 6-வது முறையாக தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.  ஊரடங்கால் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பணிகள் நடைபெறாமல் உள்ள நிலையில், நாட்டின் பொருளாதார சூழல் தேக்கமடைந்து காணப்படுகிறது.

இதேபோன்று, கொரோனாவால் நாட்டில் இதுவரை 8  லட்சத்தை தாண்டியது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. எனினும் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு குணமடைந்தவர்களின் விகிதம் 63% ஆக உள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார சூழல் ஆகியவற்றால் எழுந்துள்ள அரசியல் சூழ்நிலை ஆகியவற்றை பற்றி எதிர்க்கட்சியான காங்கிரசின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, வீடியோ கான்பரன்சிங் வழியே  இன்று  காங்கிரஸ் எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.  

Next Story