கொரோனா சுவாச பாதிப்பு சிகிச்சையளிக்க 'சொரியாசிஸ்' மருந்துக்கு இந்தியா மருந்து கட்டுப்பாட்டாளர் ஒப்புதல்
மிதமான மற்றும் கடுமையான சுவாசக் கோளாறு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இடோலிசுமாப் என்ற மருந்துக்கு இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளித்து உள்ளார்.
புதுடெல்லி:
கொரோனா நோயாளிகளுக்கு மிதமான மற்றும் கடுமையான சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க "தடைசெய்யப்பட்ட அவசரகால பயன்பாட்டிற்காக" தோல் நோய் தடிப்புத் தோல் அழற்சியைக் ( சொரியாசிஸ்) குணப்படுத்த பயன்படும் இடோலிசுமாப் என்ற மருந்துக்கு இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு அதன் மருத்துவ பரிசோதனைகள் சைட்டோகைன் வெளியீட்டு நோய்க்குறி சிகிச்சைக்காக நுரையீரல் நிபுணர்கள், மருந்தியல் நிபுணர்கள் மற்றும் எய்ம்ஸின் மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய நிபுணர் குழுவால் திருப்திகரமாக கண்டறியப்பட்ட பின்னர் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இது ஏற்கனவே பல ஆண்டுகளாக தடிப்புத் தோல் அழற்சிக்கு சிகிச்சையளிக்க பயோகானின் அங்கீகரிக்கப்பட்ட மருந்து" என்று அதிகாரி கூறினார்.
இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒவ்வொரு நோயாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை, என கூறினார்
Related Tags :
Next Story