சூரத் நகைக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கும் வைரம் பதித்த முகக்கவசங்கள் !


சூரத் நகைக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கும் வைரம் பதித்த முகக்கவசங்கள் !
x
தினத்தந்தி 11 July 2020 10:33 AM IST (Updated: 11 July 2020 10:33 AM IST)
t-max-icont-min-icon

சூரத் நகைக்கடையில் வைரம் பதித்த முகக்கவசங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சூரத்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களை கவர பல்வேறு வண்ணங்கள் மற்றும் பிரபலங்களின் படங்களுடன் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்படும் செய்திகளை பார்த்து வருகிறோம்.

ஆனால், சூரத்தில் உள்ள நகைக்கடை இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று வைரம் பதித்த முகக்கவசங்களை விற்பனைக்கு வைத்து அனைவரையும் வியப்பில்  ஆழ்த்தியுள்ளது. வைரம் பதித்த இந்த முகக்கவசங்கள் ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் நகைக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக நகைக் கடையின் உரிமையாளர் தீபக் சோக்ஸி கூறும்போது, வாடிக்கையாளர் ஒருவர் தனது வீட்டில் வைத்து நடைபெறும் திருமணத்திற்காக எங்கள் கடைக்கு வந்து, மணமகனுக்கும், மணமகளுக்கும் தனித்துவமான முகக்கவசங்கள் வேண்டும் என கோரியதைத் தொடர்ந்து, தனக்கு இந்த யோசனை வந்ததாக கூறினார்.


Next Story