ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயற்சி - அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக அரசியல் விளையாட்டை துவக்கியுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் குற்றம்சாட்டி உள்ளார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்-மந்திரியாக அசோக் கெலாட் இருந்து வருகிறார்.
இந்நிலையில் முதல்-மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். அதையே நாங்கள் செய்து வருகிறோம். இந்த கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற முயலுகிறோம். ஆனால் ராஜஸ்தான் மாநில அரசை கவிழ்க்க பாஜக முயலுகிறது.
இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல அல்ல. 2014-ம் ஆண்டுக்கு பிறகு பாஜக மிக மோசமாக மாறி விட்டது. மதத்தை பயன்படுத்தி பெருமையையும், பிரிவுகளை உருவாக்க முயலுகிறார்கள். மாநிலத்தில் காங்கிரஸ் அரசு, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவரையும் இணைந்து பணியாற்றி வருகிறது.
ராஜஸ்தானில் இந்த அரசாங்கம் நிலையானது, அது அதன் முழு காலத்தையும் நிறைவு செய்யும். அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தயாரிப்புகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story